Advertisement

ரூ.1.70 கோடி மதிப்பு பிஎம்டபிள்யூ காரை வாங்கிய பிரபல இயக்குனர்

By: Nagaraj Thu, 17 Aug 2023 8:05:31 PM

ரூ.1.70 கோடி மதிப்பு பிஎம்டபிள்யூ காரை வாங்கிய பிரபல இயக்குனர்

சென்னை: லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ரூ. 1.70 கோடி மதிப்புள்ள புதிய BMW 7 Series காரை வாங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்று பெயர் வாங்கிய அவர் அடுத்து கைதி என்ற படத்தை கார்த்தி வைத்து இயக்கினார்.

அப்படத்தின் வெற்றி அப்படியே கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். இப்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

new car,director,shooting,busy,bought ,புதிய கார், இயக்குனர், படப்பிடிப்பு, பிஸி, வாங்கினார்

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படமும் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக இப்போது வரை கூறப்படுகிறது.

லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது புதிய BMW 7 Series காரை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு ரூ. 1.70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Tags :
|