- வீடு›
- பொழுதுபோக்கு›
- தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல இந்தி நடிகர்
தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல இந்தி நடிகர்
By: Nagaraj Tue, 21 Mar 2023 7:33:02 PM
ஹைதராபாத்: நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரன்வீர் சிங், தரையில் கிடந்த குப்பைகளை அகற்றினார்.
ஹிந்தி திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்நிலையில், நடிகர் ரன்வீர் சிங், திரையுலக பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் தர்ஷன் யெவலேகரின் சிகையலங்காரக் கடையை திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உற்சாகத்துடன் காணப்பட்ட ரன்வீர் சிங், தரையில் கிடந்த குப்பைகளை அகற்றினார். திரை பிரபலங்களை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஸ்தா என்பவருடன் பிராங்க் விளையாட்டிலும் ஈடுபட்டார். அவர் நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.ஒரு பொது நிகழ்ச்சியில் விளம்பரம் தேடுவதற்காக ரன்வீர் இப்படி நடந்து கொள்கிறார் என சிலர் இதை சுட்டிக்காட்டினர். மற்றவர்கள், ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன் போன்றவர்கள் அடிக்கடி தூய்மை பற்றி பேசுகிறார்கள்.
அதன் விளைவு அவருக்கும் தொற்றிக்கொண்டதாக கிண்டலடித்து வருகின்றனர். இந்த தருணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வந்தது போன்று உள்ளது. அதிர்ஷ்டவசத்தில், அதற்கு சில காகித துண்டுகளும் அவருக்கு உதவி செய்து உள்ளன என ஒருவரும், 50 ரூபாய்க்காக ஓவர் ஆக்டிங் செய்கிறார் என மற்றொருவரும் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.