Advertisement

வேட்டையாடு விளையாடு படம் மறுவெளியீட்டிலும் அசத்தல் கலெக்சன்

By: Nagaraj Tue, 04 July 2023 7:35:55 PM

வேட்டையாடு விளையாடு படம் மறுவெளியீட்டிலும் அசத்தல் கலெக்சன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

kamal haasan,re-release,movie,collection,reviews ,கமல்ஹாசன், மறு வெளியீடு, படம், வசூல், கண்டுகளிப்பு

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன் வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது. சென்னையில் வெளியான திரைகளில் முதல்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில், இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

Tags :
|