Advertisement

வெளியீட்டிற்கு முன்பே இங்கிலாந்தில் லியோ படம் நடத்திய சாதனை

By: Nagaraj Sat, 09 Sept 2023 10:00:08 AM

வெளியீட்டிற்கு முன்பே இங்கிலாந்தில் லியோ படம் நடத்திய சாதனை

சென்னை: லியோ படத்தின் புதிய சாதனை... இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

இதனை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு", திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் "லியோ" திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

leo film,great reception,first day,england,thank you ,லியோ படம், அமோக வரவேற்பு, முதல் நாள், இங்கிலாந்து, நன்றி

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. பீஸ்ட் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் அதிக வசூலையும் பெற்றது.

இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட "வாரிசு" அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் நடிகர் விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

Tags :