Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்ட காட்சிகள் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்ட காட்சிகள் வெளியானது

By: Nagaraj Wed, 28 Sept 2022 9:19:58 PM

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்ட காட்சிகள் வெளியானது

சென்னை: சில நிமிட முன்னோட்ட காட்சிகள் வெளியானது... இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.

pandyas,cholas,revenge,scenes,mani ratnam ,பாண்டியர்கள், சோழர்கள், பழிவாங்கல், காட்சிகள், மணிரத்னம்

வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் சில நிமிட முன்னோட்டக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதில் பாண்டியர்களது காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. சோழர்களை பழிவாங்க வேண்டுமென அவர்கள் சபதமெடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

Tags :
|
|