Advertisement

இயக்குனர் நெல்சனுக்கு அழகிய ஸ்கூட்டரை பரிசளித்த ஹிந்தி நடிகர்

By: Nagaraj Tue, 07 Mar 2023 11:17:21 PM

இயக்குனர் நெல்சனுக்கு அழகிய ஸ்கூட்டரை பரிசளித்த ஹிந்தி நடிகர்

சென்னை: இயக்குனர் நெல்சனுக்கு அழகிய ஸ்கூட்டர் ஒன்றை கிப்ட்டாக கொடுத்துள்ளார் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோப்.

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நெல்சன். அதற்கு பிறகு டாக்டர் படம் அவருக்கு இன்னும் பெயர் பெற்று கொடுத்தது.

director nelson,scooter,hindi actor,jockey,prize ,இயக்குனர் நெல்சன், ஸ்கூட்டர், ஹிந்தி நடிகர், ஜாக்கி, பரிசு

அதன் பின் அவர் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்த காரணத்தால் அவர் அடுத்து ரஜினியை வைத்து இயக்க இருந்த ஜெயிலர் படத்தில் இருந்து நீக்கப்படுவார் என தகவல் பரவியது. ஆனால் ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தற்போது இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார். இதற்காக நெல்சன் ட்விட்டரில் அவருக்கு நன்றி கூறி இருக்கிறார்.

Tags :
|