Advertisement

பல சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

By: Nagaraj Thu, 17 Aug 2023 6:27:06 PM

பல சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

சென்னை: தமிழில் மட்டுமில்லை மற்ற மொழி படங்களின் வசூல் சாதனையை ஜெயிலர் படம் முறியடித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். ரூ. 200 முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 450 கோடி மேல் உலகம் முழுவதும் வசூலித்து விட்டதாம்.

bollywood actor,jailer,actor rajini,salary,celebrities ,பாலிவுட் நடிகர், ஜெயிலர், நடிகர் ரஜினி, சம்பளம், பிரபலங்கள்

தமிழில் மட்டுமில்லை மற்ற மொழி படங்களின் வசூல் சாதனையை கூட இப்படம் முறியடித்து வருகிறது. பட வசூலை தாண்டி இதில் நடித்த நடிகர்களின் சம்பளமும் பெரிய அளவில் அதாவது கோடியில் தான் உள்ளது.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|
|