Advertisement

பெரிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது... நடிகர் பாலா தகவல்

By: Nagaraj Thu, 30 Mar 2023 11:02:36 PM

பெரிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது... நடிகர் பாலா தகவல்

ஐதராபாத்: இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். ஆனால் உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலான அறிமுகமானவர் நடிகர் பாலா. தமிழில் சில படங்களில் நடித்தாலும் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

actor,operation,surgery, ,அறுவை சிகிச்சை, உருக்கம், பாலா

நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நாட்களுக்கு முன்பு. அவரை இயக்குனர் சிறுத்தை சிவா நேரில் சென்று பார்த்தார்.

இந்நிலையில் நடிகர் பாலா தனது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவர், “அனைவரின் பிரார்த்தனைக்கு நன்றி, நான் குணமடைந்து வருகிறேன்.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். ஆனால் உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்றார்.

Tags :
|