Advertisement

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படம்

By: Nagaraj Sat, 03 Sept 2022 10:28:59 PM

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படம்

சென்னை: புதிய படத்தின் அறிவிப்பு... நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான 'எஃப்ஐஆர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 'மோகன் தாஸ்' 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

selvaraghavan,villain,vani bhojan,thriller,pujai of the film ,
செல்வராகவன், வில்லன், வாணி போஜன், திரில்லர், படத்தின் பூஜை

இந்நிலையில், விஷ்ணு விஷால் இயக்குநர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீண் இயக்கத்தில் 'ஆர்யன்' என்கிற புதிய கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இப்படத்தில், செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Tags :