Advertisement

லியோ படத்தின் ஆடியோ உரிமை விற்பனையில் புதிய சாதனை

By: vaithegi Fri, 07 Apr 2023 1:54:36 PM

லியோ படத்தின் ஆடியோ உரிமை விற்பனையில் புதிய சாதனை

ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் இந்தியா 16 கோடி கொடுத்து வாங்கியுள்ளது ... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதால் படத்தின் பாடல்கள் மீதும், பின்னணி இசை மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பு விஜய் – அனிருத் கூட்டணியில் வெளியான படங்களின் அனைத்து ஆல்பமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

leo,performance,sales ,லியோ ,சாதனை , விற்பனை

எனவே அதைபோன்று இந்த லியோ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதன்படி, லியோ படத்தின் ஆடியோ உரிமை விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. எனவே அதன்படி, லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் இந்தியா 16 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

இதுவரை எந்த தமிழ் படத்தின் ஆடியோ உரிமை இவ்வளவு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதில்லை. இதுவே முதன் முறையாம். இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என்றால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பாடல்கள் பேசப்படும் என்று தெரிகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|