Advertisement

குழந்தையின் கையை மென்மையாக தொட்டுப்பார்க்கும் வளர்ப்பு நாய்

By: Nagaraj Tue, 18 Aug 2020 09:12:35 AM

குழந்தையின் கையை மென்மையாக தொட்டுப்பார்க்கும் வளர்ப்பு நாய்

செல்லமாக தொட்டுப்பார்க்கும் வளர்ப்பு நாய்... தங்களுடைய வளர்ப்பு நாய் பிஞ்சுக் குழந்தையின் கையை முதன்முதலாக தொட்டுப்பார்க்கும் வீடியோவை நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ளார்.

பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நகுல் பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்கள்.

அவ்வப்போது பாடல் பாடுவது, உடற்பயிற்சி, வளர்ப்பு நாயின் சேட்டைகள் என நகுல்-ஸ்ருதி ஜோடி இன்ஸ்டாவில் பதிவிடுவார்கள். இவர்களுக்கு இன்ஸ்டாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் இந்த ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அது தொடர்பான புகைப்படத்தையும் இருவரும் இன்ஸ்டாவில் பகிர, பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

nakul,sruthi,pet dog,baby,gently touches ,நகுல், ஸ்ருதி, வளர்ப்பு நாய், குழந்தை, மென்மையாக தொடுகிறது

இந்நிலையில் தங்களுடைய குழந்தையின் கையை முதன்முதலாக வளர்ப்பு நாய் தொட்டுப்பார்க்கும் வீடியோவை நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ளார். அது குறித்து நெகிழ்ச்சியை பதிவிட்டுள்ள அவர் இது எங்கள் இதயத்தை உருக செய்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வளர்ப்பு நாய் , மெதுவாக நகர்ந்து பிஞ்சுக் குழந்தையின் கைகளை அவ்வளவு மென்மையாக தொடுகிறது. இது பார்ப்போரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

Tags :
|
|
|