Advertisement

வாரிசு படப்பிடிப்பின் போது விஜய்யுடன் ராஷ்மிகா எடுத்த புகைப்படம்

By: Nagaraj Wed, 14 Sept 2022 6:07:47 PM

வாரிசு படப்பிடிப்பின் போது விஜய்யுடன் ராஷ்மிகா எடுத்த புகைப்படம்

சென்னை; வைரலாகும் புகைப்படம்... ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.

photo,actor vijay,rashmika,lead role,viral ,புகைப்படம், நடிகர் விஜய், ராஷ்மிகா, முக்கிய வேடம், வைரல்

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்கு இடையே நாயகி ராஷ்மிகா நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|