- வீடு›
- பொழுதுபோக்கு›
- படப்பிடிப்பின் போது எடுத்த படம்... டுவிட்டரில் பதிவிட்ட இயக்குனர் லோகேஷ்
படப்பிடிப்பின் போது எடுத்த படம்... டுவிட்டரில் பதிவிட்ட இயக்குனர் லோகேஷ்
By: Nagaraj Tue, 14 Feb 2023 04:53:23 AM
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது, படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக படக்குழு சமீபத்தில் விமானத்தின் மூலம் காஷ்மீர் சென்றார்கள். இதனையடுத்து முதற்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் லியோ படத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கெளதம் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். காஷ்மீரில் குளிர் அதிகமாக இருப்பதால் தீயை முட்டிக்கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.