- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ செய்யும் அடுக்கடுக்கான வசூல் சாதனைகள்
லியோ செய்யும் அடுக்கடுக்கான வசூல் சாதனைகள்
By: Nagaraj Mon, 23 Oct 2023 3:39:54 PM
சென்னை: விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த வாரிசு படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
ஆனாலும் கூட மக்கள் இப்படத்திற்கு அமோக ஆதரவை கொடுத்து வருகிறார்கள். உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, லியோ திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த வாரிசு படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் என்னென்ன புதிய வசூல் சாதனைகளை லியோ படைக்க போகிறது என்பதையும் பார்க்க ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.