- வீடு›
- பொழுதுபோக்கு›
- தவமாய் தவமிருந்து தொடர் தம்பதிகளுக்கு ஏக வரவேற்பு
தவமாய் தவமிருந்து தொடர் தம்பதிகளுக்கு ஏக வரவேற்பு
By: Nagaraj Tue, 11 July 2023 09:05:55 AM
சென்னை; சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரிட்டோ மனோ, ராஜா ராணி -2 தொடரில் நடித்த சந்தியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இணைந்து நடித்து வரும் தவமாய் தவமிருந்து தொடருக்கு ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இவர்கள் இருவரும் தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து தொடரில் தம்பதிகளாக நடித்து வருகின்றனர். இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் தம்பதிகளாக நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இவர்கள் திருமணத்துக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரிட்டோவின் நண்பரும் சின்னத்துரை நடிகருமான சித்து, இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் சேர்ந்து நடிக்கும் தொடரும், அதில் அவர்கள் இருவரின் காட்சிகளும் பல்வேறு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.