Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை; விஜய்சேதுபதியை கழற்றி விட்ட அமீர்கான்

சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை; விஜய்சேதுபதியை கழற்றி விட்ட அமீர்கான்

By: Nagaraj Thu, 10 Dec 2020 8:51:18 PM

சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை; விஜய்சேதுபதியை கழற்றி விட்ட அமீர்கான்

விஜய்சேதுபதியை கழற்றி விட்டுள்ளார் அமீர்கான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி இவருக்கு தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வாய்ப்புகள் வருகிறது.

ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்கை வாங்கி பாலிவுட்டில் சில மாற்றங்கள் செய்து அமீர்கான் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது.

vijay sethupathi,aamir khan,new film,has taken off ,விஜய் சேதுபதி, அமீர்கான், புதிய படம், கழற்றி விட்டார்

இப்படத்தில் அமீர்கான் சிங் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்ட அமீர்கான் ஹெலிகாப்டர் மூலம் விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்கே வந்து அவரிடம் பேசி விட்டு சென்றார்.

அப்படத்திற்காக உடல் எடையையும் குறைக்குமாறு அமீர்கான் கூறியிருந்தாராம். ஆனால், விஜய் சேதுபதி அதை கேட்கவில்லை. எனவே, விஜய் சேதுபதியை தூக்கிவிட்டு பாலிவுட்டிலேயே வேறு ஒரு நடிகரை புக் செய்து விட்டாராம் அமீர்கான்.

அமீர்கான் இந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு நடிகர். எனவே, அவருடன் நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதி இழந்துள்ளது அவருக்குதான் நஷ்டம் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Tags :