Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அதிரடிப்பாரா? அமைதி காப்பாரா? வாரிசு இசை வெளியீட்டு விழாவில் என்ன நடக்கும்?

அதிரடிப்பாரா? அமைதி காப்பாரா? வாரிசு இசை வெளியீட்டு விழாவில் என்ன நடக்கும்?

By: Nagaraj Thu, 17 Nov 2022 3:35:02 PM

அதிரடிப்பாரா? அமைதி காப்பாரா? வாரிசு இசை வெளியீட்டு விழாவில் என்ன நடக்கும்?

சென்னை: இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அமைதி காப்பாரா? அல்லது அதிரடிப்பாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி ஏற்கனவே தமிழில் நடிகர் கார்த்தி மற்றும் நாகர்ஜூனாவை வைத்து தோழா படத்தை இயக்கியவர். இந்த படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் சூடு பிடிக்க வரும் பொங்கலன்று வாரிசு ரிலீஸ் என அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில் அஜித்தின் துணிவு பட ரிலீஸ், உதயநிதியின் தலையீடு, தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல், தெலுங்கில் ரிலீசாவதில் ஏற்பட்ட குளறுபடி என வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என கடந்த சில தினங்களாக பல விமர்சனங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|