- வீடு›
- பொழுதுபோக்கு›
- இயக்குனர் ஆதிக் ரவிசந்திரனுடன் கைகோர்க்கும் நடிகர் அஜித்
இயக்குனர் ஆதிக் ரவிசந்திரனுடன் கைகோர்க்கும் நடிகர் அஜித்
By: vaithegi Thu, 12 Oct 2023 10:55:35 AM
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். இதையடுத்து தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் தீவிரமாக இறங்கியும் இருக்கிறாராம். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய போவதாக செய்திகள் சில வெளியானது.
ஆனால், அஜித் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்நிலையில், மார்க் ஆண்டனி எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்துள்ள நிலையில், அஜித் அவரிடம் வேறொரு கதையை கேட்டு அக்கதை பிடித்துப்போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தை ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விடுதலை திரைப்படத்தை தயாரித்த கீழ் எல்ரெட் குமார் தயாரிக்கவிருக்கிறாராம். இதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தமிழ் திரையுலகை அதிர வைக்கும் செய்தியும் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால், இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளம் தான். அப்படி எவ்வளவு சம்பளம் என்றால் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு அவர் சம்பளமாக 150 கோடி கேட்டு உள்ளராம். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதத்தை தெரிவித்து ஒற்றுக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.