Advertisement

துணிவு படத்தின் டப்பிங் பணிகளை துவக்கிய நடிகர் அஜித்

By: Nagaraj Sat, 05 Nov 2022 5:40:24 PM

துணிவு படத்தின் டப்பிங் பணிகளை துவக்கிய நடிகர் அஜித்

சென்னை: துணிவு படத்தின் டப்பிங் பணியில் நடிகர் அஜித் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ajith,photo,dubbing work,fans,trend ,அஜித், புகைப்படம், டப்பிங் பணி, ரசிகர்கள், ட்ரெண்ட்

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துணிவு படத்தின் டப்பிங் பணியில் நடிகர் அஜித் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Tags :
|
|
|