Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மங்காத்தா படத்தை விட ஒரு சிறப்பான ஆக்ஷன் படம்; வலிமை படம் குறித்து படக்குழுவினர்

மங்காத்தா படத்தை விட ஒரு சிறப்பான ஆக்ஷன் படம்; வலிமை படம் குறித்து படக்குழுவினர்

By: Monisha Tue, 17 Nov 2020 5:16:50 PM

மங்காத்தா படத்தை விட ஒரு சிறப்பான ஆக்ஷன் படம்; வலிமை படம் குறித்து படக்குழுவினர்

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுடன் 'வலிமை' படத்தின் ராமோஜிராவ் பிலிம்சிட்டி படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் கழித்து மீண்டும் ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீபாவளிக்கு விடுமுறை எடுக்காமல் அஜித் படக்குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், படத்தின் காட்சி அமைப்புகள், கேரக்டர் நன்றாக வருவதற்கு அதிக நேரம் ஆகும் என்பதை புரிந்து கொண்ட அஜித், தனது தரப்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் இயக்குனர் உள்பட படக்குழுவினர் திருப்தி அடைந்தனர் என்றும் கூறப்பட்டது.

ajith,h vinod,action film,strength,crew ,அஜித்,எச் வினோத்,ஆக்ஷன் படம்,வலிமை,படக்குழுவினர்

மேலும் 'வலிமை' படத்தின் அப்டேட் வராமல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பது போனிகபூருக்கும் தெரியும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 'வலிமை' படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழுவினர்கள் உறுதியாக இருப்பதாகவும், 'வலிமை' படத்தின் அப்டேட் வரும்போது மாஸாக இருக்கும் என்பதால் தற்போது வருத்தமாக இருக்கும் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகமாக மாறுவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படம் என்றும் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டு பார்த்தபோது மிக சிறப்பாக வந்திருப்பதை அறிந்து படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மங்காத்தா படத்தை விட ஒரு சிறப்பான ஆக்ஷன் படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags :
|