Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

By: Nagaraj Sat, 18 July 2020 7:39:16 PM

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் பிடித்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர், நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டு, அஜித் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

ajith,bomb threat,caught,agitated ,அஜித், வெடிகுண்டு மிரட்டல், சிக்கினார், பரபரப்பு

செல்போன் எண்ணை வைத்து ஆராய்ந்ததில் மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த நபரை விழுப்புரம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததும், இதற்கு முன்பும் இது போல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியவர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|