- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் பிரபலங்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட செல்பி
பிக்பாஸ் பிரபலங்களுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட செல்பி
By: Nagaraj Sat, 08 Oct 2022 11:53:14 PM
சென்னை: பிக் பாஸ் - 5 சீசனில் உள்ளே சென்று பின்னர் வெளியேறி காதல் ஜோடிகளாக மாறியுள்ள அமீர், பாவனி ஆகியோருடன் செல்ஃபி எடுத்துள்ளார் நடிகர் அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் First லுக் அண்மையில் வெளிவந்தது. விரைவில் இப்படத்தின் முதல் பாடலுக்காகவும், டீசருக்காகவும் தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிக் பாஸ் காதல் ஜோடிகளான அமீர் மற்றும்
பாவனி நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதை அஜித்
உறுதிசெய்துள்ளார். அமீர் மற்றும் பாவனியுடன் நடிகர் அஜித் எடுத்த செல்ஃபி
தற்போது வெளிவந்துள்ளது. இதன்முலம், இருவரும் அஜித்துடன் துணிவு படத்தில்
நடிப்பது உறுதியாகியுள்ளது.
அவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் பிரபலம்
சிபியும் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், அவர்
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று
கூறப்படுகிறது.