Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் அமிதாப்... ரசிகர்கள் வேண்டுதல்

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் அமிதாப்... ரசிகர்கள் வேண்டுதல்

By: Nagaraj Tue, 07 Mar 2023 5:38:06 PM

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் அமிதாப்... ரசிகர்கள் வேண்டுதல்

மும்பை: படப்பிடிப்பில் அமிதாப் காயம்... ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் காயம் அடைந்தார். இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். தற்போது 80 வயதை கடந்தாலும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ப்ராஜெக்ட் கே என்ற படம் தயாராகி வருகிறது. மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ப்ராஜெக்ட் கே. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டு நடித்தார். அமிதாப் பச்சன் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது.

amitha bachchan,movie,project, ,அமிதாப்பச்சன், எலும்பு முறிவு, படப்பிடிப்பு

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். அமிதாப் பச்சன் தனது வலைப்பதிவில் விலா எலும்பு முறிவு மற்றும் தசைக் கிழிந்ததால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு, ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமிதாப் பச்சன், அதன் பின்னரே வீடு திரும்பியதாக கூறினார்.

அமிதாப் பச்சன் வலியால் நடக்க சிரமமாக இருப்பதாகவும், குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமிதாப் பச்சனின் காயம் காரணமாக ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags :
|