Advertisement

நடிகர் அர்ஜுன்தாஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்!

By: Monisha Wed, 02 Sept 2020 3:08:39 PM

நடிகர் அர்ஜுன்தாஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்திலும் நடிகர் அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன்தாஸ் நாயகனாக நடித்த திரைப்படம் 'அந்தகாரம்'. இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஓடிடியில் இம்மாதம் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

actor arjundas,ott,film,director atllee ,நடிகர் அர்ஜுன்தாஸ்,ஓடிடி,திரைப்படம்,இயக்குனர் அட்லி

விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கிய 'அந்தகாரம்' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான், பூஜா, குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மூன்று கதைகள் இருப்பதாகவும் மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|
|