- வீடு›
- பொழுதுபோக்கு›
- போர் தொழில் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் அருண் விஜய்
போர் தொழில் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் அருண் விஜய்
By: Nagaraj Tue, 13 June 2023 11:33:54 PM
சென்னை: ‘போர் தொழில்’ படத்தை பாராட்டி நடிகர் அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் ‘போர் தொழில்’ இப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படம் ஜூன் 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சரத்குமார் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜோய் இசையமைக்க, கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘போர் தொழில்’ படத்தை பாராட்டி நடிகர் அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘போர் தொழில்’ காட்சிகள் அதிகமாகியுள்ளது. எல்லாம் இடங்களிலும் ஹவுஸ்ஃபுல், வார விடுமுறை படத்திற்கு கூடுதல் பலம். பிரம்மாண்ட விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் மிகவும் முக்கியமானது என்று தெளிவாக காட்டுகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.