Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • யானை படத்தின் வெற்றிக்கு பின் பிரபல இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் அருண் விஜய்

யானை படத்தின் வெற்றிக்கு பின் பிரபல இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் அருண் விஜய்

By: Nagaraj Thu, 07 July 2022 2:42:47 PM

யானை படத்தின் வெற்றிக்கு பின் பிரபல இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் அருண் விஜய்

சென்னை: யானை படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அருண் விஜய் பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அருண் விஜய் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் இளம் வயதிலேயே நடிக்க வந்தாலும் அவருக்கு பெயர் கொடுக்கும் அளவிற்கு சரியான படம் எதுவும் அமையவில்லை. பின் அஜித்துடன் என்னை அறிந்தால் படம் நடிக்க அவருக்கு கொஞ்சம் ரீச் கிடைத்தது. அதன்பிறகு அருண் விஜய் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் கொஞ்சம் கவனிக்கப்பட்டது.

இப்போது அவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்துள்ளார். படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஜுலை 1ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.

director vijay,elephant movie,alliance,actor vijay arun,people ,இயக்குனர் விஜய், யானை திரைப்படம், கூட்டணி, நடிகர் விஜய் அருண், மக்கள்

அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் முதன்முறையாக ஜோடி அமைத்து நடித்துள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 12.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர். வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை யானை திரைப்படம் பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அங்கி சிறகுகள், பார்டர், பாக்ஸர் ஆகிய படங்கள் அருண் விஜய் கைவசம் உள்ளது. இந்நிலையில், அருண் விஜய் அடுத்தாக பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளாராம்.

Tags :