Advertisement

நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:38:38 AM

நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

சென்னை: டிரைலர் வெளியீடு... நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று 22ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெடி படத்துக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் - ஆர்யா இணைந்துள்ள படம் கேப்டன். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய நினைவுகள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

trailer,release,announcement,arya,captain,movie ,டிரைலர், வெளியீடு, அறிவிப்பு, ஆர்யா, கேப்டன், படம்

கேப்டன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடுகிறார்.

தற்போது படத்தின் டிரைலர் இன்று வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
|