Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • த்ரிஷா பற்றி மன்சூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சிரஞ்சீவி

த்ரிஷா பற்றி மன்சூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சிரஞ்சீவி

By: Nagaraj Thu, 23 Nov 2023 3:43:53 PM

த்ரிஷா பற்றி மன்சூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சிரஞ்சீவி

ஐதராபாத்: த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கருத்துகள் என் கவனத்துக்கு வந்தது.

chiranjeevi,kandanam,mansoor alikhan,trisha, ,கண்டனம், சிரஞ்சீவி, த்ரிஷா, மன்சூர் அலிகான்

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துகள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், மோசமானதாகவும் இருக்கிறது. இந்த கருத்துகள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும்.

சிலர் வக்கிரத்தில் விழுந்து விடுகிறார்கள். மன்சூர் அலிகானும் அதில் ஒருவர். த்ரிஷாவுடன் நான் நிற்கிறேன். மேலும் இதுபோன்ற கொடூரமான கருத்துகளுக்கு உள்ளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணும் த்ரிஷா போல் போராட வேண்டும். இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

Tags :
|