Advertisement

ரஜினி படத்தின் போஸ்டரை பகிர்ந்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி

By: Nagaraj Tue, 23 Aug 2022 11:37:37 AM

ரஜினி படத்தின் போஸ்டரை பகிர்ந்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி

சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் முதல் பார்வை போஸ்டர் வெளியான நிலையில் தனுஷ் “வாவ்” என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


நடிகர் தனுஷ் எப்பொழுதும் தன்னை ரஜினிகாந்த்தின் ரசிகராகக் காட்டிக்கொள்வார். அவரது ஒவ்வொரு பட போஸ்டரும் வெளியாகும்போதும் அதனைப் பகிர்வதை தனுஷ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரஜினிகாந்த்தின் காலா படத்தையும் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

jailer,actor dhanush,wow,division,rajinikanth,movie ,ஜெயிலர், நடிகர் தனுஷ், வாவ், பிரிவு, ரஜினிகாந்த், திரைப்படம்

ஆனால் ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்கு பிறகு அவர் அப்படி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் பட முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து, 'வாவ்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், ஐஸ்வர்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Tags :
|
|