Advertisement

தனி ஆளாக நின்று போட்டி போட தயாராகி விட்டார் நடிகர் தனுஷ்

By: Nagaraj Tue, 06 Sept 2022 10:36:26 PM

தனி ஆளாக நின்று போட்டி போட தயாராகி விட்டார் நடிகர் தனுஷ்

சென்னை: ொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியிலேயே நானே வருவேன் படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.

கோடிகளை வசூலாக அள்ளிக் குவித்து வருகிறது. ஓடிடியிலயே வெளியாகி கொண்டு இருந்த தனுஷின் படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் வாயிலாக திரையரங்கில் காலடி எடுத்து வைத்தது.

அதன் பயனாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். எல்லா வேலைகளும் முடிந்து படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் இருக்கின்றன.

Tags :