Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் தினேஷ்: மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார்

வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் தினேஷ்: மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார்

By: Nagaraj Sun, 30 July 2023 10:49:15 PM

வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் தினேஷ்: மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார்

சென்னை: வித்தியாசமான கெட்டப்... பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் வெற்றியால் அந்தப்படத்தின் பெயரால் அட்டகத்தி தினேஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
தினேஷ் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். உலக அளவில் பாராட்டுக்களை குவித்த விசாரணை, குக்கூ மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு முதலான படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

பல ஹீரோக்கள் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கவனம் செலுத்தும் போது, தினேஷ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

investigation,cuckoo,difference,ketab,dinesh,joins ,விசாரணை, குக்கூ, வித்தியாசம், கெட்டப், தினேஷ், இணைகிறார்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வேடம் ஏற்கும் தினேஷ் தற்போது, ஜே பேபி, தண்டகாரண்யம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.மேலும், கருப்பு பல்ஸர், லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணைகிறார். இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு பெயர் வைப்பதில் படக்குழு மும்மரமாக உள்ளது தினேஷ் -ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் மூலமாக ஒரு மாறுபட்ட தினேஷை மீண்டும் திரையில் பார்க்கலாம்.

Tags :
|
|
|