Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் கவுதம் கார்த்திக் திருமணம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்

நடிகர் கவுதம் கார்த்திக் திருமணம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Sat, 12 Nov 2022 4:32:49 PM

நடிகர் கவுதம் கார்த்திக் திருமணம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளதாக தகவல்

சென்னை: நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா திருமணம் வரும் 28ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், இந்த காதல் வெளிச்சத்துக்கு வந்தது. இதை இருவரும் மறுக்கவில்லை.

manjima marriage,gautham karthik ,கவுதம் கார்த்திக் - மஞ்சிமா, திருமணம்

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் காதலை உறுதி செய்தனர். இப்போது இவர்கள் திருமண தேதி தெரிய வந்துள்ளது. வரும் 28ம் தேதி சென்னை அருகே நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடக்க இருக்கிறது.

இதில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். பிறகு திரையுலகினருக்குத் தனியாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :