Advertisement

நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின்

By: Nagaraj Sun, 20 Aug 2023 9:52:39 PM

நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின்

சென்னை: நீண்ட நாள் தோழியை கரம் பிடித்துள்ளார் நடிகர் கவின். இந்த த்ம்பதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர்களது திருமணம் நடந்துள்ளது.

gavin,photos,wedding,viral,girlfriend,congratulations ,கவின், புகைப்படங்கள், திருமணம், வைரல், தோழி, வாழ்த்து

திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் நடிகர் கவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காமெடி நடிகர் புகழ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags :
|
|
|