- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் ஜெய் நடித்துள்ள எண்ணித் துணிக படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
நடிகர் ஜெய் நடித்துள்ள எண்ணித் துணிக படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
By: Nagaraj Sun, 24 July 2022 00:10:11 AM
சென்னை: நடிகர் ஜெய் நடித்துள்ள எண்ணித் துணிக படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
தமிழில் பல க்ளாசிக் படங்களை கொடுத்த இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.கே. வெற்றிச்செல்வன். அவர் தற்போது ஜெய்யை வைத்து எண்ணித்துணிக என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
அதுல்யா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ்
இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் இந்தப்
படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். ரெயின் ஆப் ஆரோஸ் தயாரித்திருக்கும்
இப்படத்தின் ஷூட்டிங் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்து
முடிந்தது.
இந்தச் சூழலில் படமானது ஆகஸ்ட் 4ஆம்
தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர்
மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று நடந்தது.
விழாவில் வெற்றிச்செல்வனின் குருநாதரான வசந்த், க/பெ ரணசிங்கம் பட
இயக்குநர் விருமாண்டி, டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், அடங்காதே பட
இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஜெய், அதுல்யா
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.