Advertisement

காந்தாரா திரைப்படத்தின் ரிஷப்ஷெட்டிக்கு நடிகர் கமல் வாழ்த்து

By: Nagaraj Sat, 14 Jan 2023 10:58:28 PM

காந்தாரா திரைப்படத்தின் ரிஷப்ஷெட்டிக்கு நடிகர் கமல் வாழ்த்து

பெங்களூரு: நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரும் வசூலை அள்ளிய கன்னட படம் “காந்தாரா”. இந்த ஆண்டு வெளியான படங்களில் திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கன்னடத்தில் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது.


8 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட காந்தாரா 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். இது கர்நாடகாவில் வாழும் பழங்குடியின மக்களின் மத வழிபாட்டைச் சுற்றி உருவாக்கப்பட்டது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் படத்தைப் பாராட்டினர்.

congratulation,gandhara,kamal hassan, ,கமல்ஹாசன், காந்தாரா, வாழ்த்து

இதையடுத்து, ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மடல் அளித்துள்ளார்.

இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவான் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கமல் சாரின் இந்த எதிர்பாராத பரிசை கண்டு வியப்படைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :