Advertisement

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Wed, 14 Dec 2022 3:30:13 PM

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: கமல்ஹாசன் வாழ்த்து .... திமுக இளைஞரணி செயலாளரும் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் .

இதையடுத்து இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள்.

kamal haasan,stalin ,கமல்ஹாசன் ,ஸ்டாலின்

அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், 3 தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது." என பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :