- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி
By: Nagaraj Fri, 25 Nov 2022 10:36:12 AM
சென்னை: உடல் நலக்குறைவு... நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங், பிக் பாஸ், அரசியல் என பல வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
அதனால் அவர் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கமல் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் ஷோவை தொகுத்து
வழங்க வருவாரா?, அவர் வரவில்லை என்றால் யார் தொகுப்பாளர் என பல கேள்விகளை
ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
முந்தைய
சீசன்களில் நடந்தது போல கமலுக்கு பதில் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன்
தொகுப்பாளராக வரலாம் என தெரிகிறது. ஆனால் கமல் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்
ஆகிவிடுவார் என மருத்துவமனை தெரிவித்திருப்பதால், அவரே தான் பிக் பாஸ் ஷோவை
தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.