Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்த நடிகர் கமல்

முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்த நடிகர் கமல்

By: Nagaraj Tue, 14 June 2022 11:55:56 PM

முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்த நடிகர் கமல்

சென்னை: விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நடிகர் கமல் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து உள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'விக்ரம்' வெற்றியையொட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது உலக அளவில் வசூல் வேட்டையில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நடிகர் கமல் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கினார்.

chief,meeting,vignette,permission,remarkable ,முதல்வர், சந்திப்பு, விக்ரம்படம், அனுமதி, குறிப்பிடத்தக்கது

நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசு வழங்கினார் இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். முன்னதாக விக்ரம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|