Advertisement

தொடர்ந்து வசூல் வேட்டையாடும் நடிகர் கமலின் விக்ரம் படம்

By: Nagaraj Mon, 20 June 2022 2:11:54 PM

தொடர்ந்து வசூல் வேட்டையாடும் நடிகர் கமலின் விக்ரம் படம்

சென்னை: வசூல்... வசூல்தான்... வாரங்களை கடந்தும் வசூல் வேட்டை நிகழ்த்திவரும் 'விக்ரம்' திரைப்படம் 'பாகுபலி 2' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 3 அன்று வெளியான இப்படம் 2 வாரங்களை கடந்தும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என அனைத்து இடங்களிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனால் விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

hope,collection,achievement,breaking,bhagwati,vikram ,நம்பிக்கை, வசூல், சாதனை, முறியடித்துள்ளது, பாகுபலி, விக்ரம்

அதன்படி, 'விக்ரம்' படம் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 300 கோடி ரூபாய் வசூலானதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலித்து 'பாகுபலி 2' படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு திரையுலகினருக்கு நம்பிக்கையளித்துள்ளது.

Tags :
|