Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

By: vaithegi Sat, 12 Nov 2022 5:52:41 PM

நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது

புதுடெல்லி: பிபாசா பாசுக்கு பெண் குழந்தை ... பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 43 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. 'அலோன்' திரைப்படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

baby,karan singh grover,bipasha basu ,குழந்தை , கரண் சிங் குரோவர், பிபாசா பாசு

திருமணத்திற்கு பின் 'டேஞ்சரஸ்' என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டகிராமில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

Tags :
|