Advertisement

ட்விட்டரில் நடிகர் கார்த்தி தன் பெயரை மாற்றினார்

By: Nagaraj Thu, 15 Sept 2022 11:42:40 PM

ட்விட்டரில் நடிகர் கார்த்தி தன் பெயரை மாற்றினார்

சென்னை: ட்விட்டரில் பெயரை மாற்றினர்... பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

twitter,name change,arunmozhi varman,vandiyath devan ,டிவிட்டர், பெயர் மாற்றம், அருண்மொழி வர்மன், வந்தியத் தேவன்

இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார். டிவிட்டரில் ‘வந்தியத்தேவன்' என அவர் பெயர் மாற்றம் செய்துள்ளார்.


முன்னதாக நடிகை த்ரிஷா குந்தவை என்றும், விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும், ஜெயம்ரவி அருண்மொழி வர்மன் என்றும் தங்களது டிவிட்டர் பெயரை மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :