Advertisement

தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டிற்கு நடிகர் கார்த்தி பாராட்டு

By: Nagaraj Wed, 22 Mar 2023 11:37:22 PM

தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டிற்கு நடிகர் கார்த்தி பாராட்டு

சென்னை: விவசாய பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்த முதல்வர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை பிரபல நடிகரும், உழவன் அறக்கட்டளை நிறுவனருமான கார்த்தி பாராட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் விவசாய பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த விவசாய பட்ஜெட்டுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விவசாய பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்த முதல்வர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை பிரபல நடிகரும், உழவன் அறக்கட்டளை நிறுவனருமான கார்த்தி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். விவசாய பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு விவசாயிகளுக்கு விவசாய கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர்மட்டம் சரிசெய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

agriculture,budjet,karthi , அறிக்கை, நடிகர் கார்த்தி, மு.க.ஸ்டாலின்

பாரம்பரிய விதைகளை பல்வகைப்படுத்துதல், அதிக அளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இந்தக் காலகட்டத்திற்கு அவசியமானவை.

விவசாயிகளின் தேவைகள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்வது அவசியமான முயற்சியாகும். தற்போது, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஆனால், அவற்றை அரிசியாக பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மிகக்குறைவாக இருப்பதையும், பழுதடைந்தால் சரிசெய்வதற்குத் தேவையான நிபுணத்துவத்தையும் இந்த தளத்தில் இயக்குவது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இது தவிர, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றதாகவும், அவர்கள் பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற குறிப்புகள் அரசின் திட்டத்தில் இணைக்கப்பட்டால், அரசு மேற்கொள்ளும் விவசாய நலத்திட்டங்கள் அதிகளவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

Tags :
|