Advertisement

ஒத்த ஓட்டு முத்தையாவாக கலக்க வருகிறார் நடிகர் கவுண்டமணி

By: Nagaraj Fri, 28 July 2023 7:22:45 PM

ஒத்த ஓட்டு முத்தையாவாக கலக்க வருகிறார் நடிகர் கவுண்டமணி

சென்னை: ஒத்த ஓட்டு முத்தையா... சிறந்த கதை இருந்தால்தான் நடிப்பேன் என்று உறுதியாக சொன்ன கவுண்டமணி மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படம் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ளது 'ஒத்த ஓட்டு முத்தையா படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்.

குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

countmani,politics,protagonist,similar vote,movie ,கவுண்டமணி, அரசியல், கதாநாயகன், ஒத்த ஓட்டு, திரைப்படம்

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். சாதாரணமாகவே கவுண்டமணியின் படத்தில் காமெடி லொள்ளு நிறையவே இருக்கும் சம கால அரசியல் என்றால் கேட்கவா வேண்டும் அரசியல்வாதிகளை 'வைத்து செய்திருப்பார்'என்று தோன்றுகிறது.

Tags :