Advertisement

சூரரைப்போற்று படம் பற்றி நடிகர் மாதவன் கூறிய கருத்து

By: Nagaraj Fri, 09 Oct 2020 7:50:25 PM

சூரரைப்போற்று படம் பற்றி நடிகர் மாதவன் கூறிய கருத்து

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் பற்றி நடிகர் மாதவன் சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பில் பல சர்ச்சைகளைக் கிளப்பிய சூரரைப்போற்று படம் ஒருவழியாக அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. மொத்த தமிழ் சினிமாவே இந்த படத்தைதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் மட்டும் பெரிய அளவில் வசூல் செய்தால் மேலும் சில பெரிய படங்களும் அமேசான் தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறது வட்டாரம்.

surya,actor surya,fans,actor madhavan ,சூரரைப்போற்று, நடிகர் சூர்யா, ரசிகர்கள், நடிகர் மாதவன்

இது ஒருபுறமிருக்க கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

இந்த படத்தை மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மாதவன் நடித்த நிசப்தம் படம் அமேசான் தளத்தில் வெளியானது. அதே போல அவருடைய அடுத்த ரிலீஸ் ஆன மாறா படமும் அதே அமேசான் தளத்தில் தான் வெளியாகிறதாம்.

இந்நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய மாதவனிடம் சூர்யா ரசிகர் ஒருவர், சூரரைப்போற்று படம் பார்த்து விட்டீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு மாதவன் mind-blowing என கமென்ட் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று படத்தினை ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
|
|