Advertisement

புல்லட் புரூஃப் வசதி கொண்ட கேரவனை வாங்கிய நடிகர் மம்முட்டி

By: Nagaraj Sun, 20 Dec 2020 5:57:13 PM

புல்லட் புரூஃப் வசதி கொண்ட கேரவனை வாங்கிய நடிகர் மம்முட்டி

புல்லட் புரூஃப் வசதி கொண்ட கேரவனை வாங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி

கார்கள் உள்ளிட்ட நவீன வாகனங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் மலையாள நடிகர் மம்முட்டி. இப்போது அவர் ஐந்து நட்சத்திர வசதி கொண்ட கேரவன் ஒன்றை புதிதாக விலைக்கு வாங்கி உள்ளார். 12 மீட்டர் நீளம் உள்ள இந்த கேரவன் புல்லட் புரூஃப் வசதி கொண்டதாகும்.

படுக்கை அறை, சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ள இந்த கேரவனை கொத்தமங்கலத்தில் உள்ள 'ஒஜேஸ் பாடி பில்டர்ஸ்' நிறுவனம் வடிவமைத்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பே இதனை வடிவமைக்கும் பணிகள் ஆரம்பமாகி விட்டன.

mammootty,caravan,bullet proof,facility,special tool ,மம்முட்டி, கேரவன், புல்லட் புரூஃப், வசதி, விசேஷ கருவி

ரோல்ராய்ஸ் காரின் முன்பகுதியில் உள்ளது போல், இதன் 'ஹெட் லைட்டுகள்' உள்ளன. இந்த கேரவனில் உள்ள டெலிவிஷன் மற்றும் விளக்குகளை மம்முட்டி, தனது மொபைல் போனில் உள்ள விஷேச கருவி மூலம் இயக்கலாம். இந்தியாவில் இது போன்ற வசதிகள் கொண்ட கேரவன் யாரிடமும் இல்லை.

மம்முட்டிக்கு ராசியான எண்- 369. இந்த கேரவனுக்கும் அதே எண்ணை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :