- வீடு›
- பொழுதுபோக்கு›
- க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் முகேன்
க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் முகேன்
By: Nagaraj Mon, 17 July 2023 7:22:53 PM
சென்னை: இயக்குனர் கவின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிகர் முகேன் நடிக்கிறார் என்று கோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘வேலன்’ வெற்றியின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கவின் இயக்கத்தில் மீண்டும் முகேன் நடிக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள். மேலும், ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகையைச் சேர்ந்த நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.
க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘பார்க்கிங்’ புகழ் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ புகழ் ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ஜி.மணிகண்ணன் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது.
சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், வாகமன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அடுத்த வாரம் தொடங்கவுள்ள இந்த பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடங்கி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.