Advertisement

நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த சகோதரி காலமானார்

By: Nagaraj Thu, 19 Oct 2023 07:08:04 AM

நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த சகோதரி காலமானார்

ஆந்திரா: நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த சகோதரி சரோஜா காலமானார். இதனால் நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கடராகவாபுரம் கிராமத்தில், வெங்கடரத்தினம், புன்னம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக 20-09-1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி நாகேஸ்வரராவ் பிறந்தார்.

இளம் வயதிலேயே நாடகத்துறையில் நுழைந்து பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் 1940ம் ஆண்டு முதன் முதலாக "தர்மபத்தினி" எனும் தெலுங்கு சினிமாவில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதுவரை அவர் 256 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு இந்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களும் அடங்கும்.

nagarjuna,sister,passed away,sad,nageswara rao ,நாகார்ஜூனா, சகோதரி, காலமானார், சோகம், நாகேஸ்வரராவ்

அன்னபூர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட நாகேஸ்வரராவிற்கு, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். அதில் சரோஜா மூன்றாவதாக பிறந்தவர். நாகேஸ்வர ராவின் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சினிமாவில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகியே இருந்தார்.

இந்நிலையில் நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வரராவின் மகளுமான நாக சரோஜா நேற்று காலாமானார். இதனால் நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

Tags :
|
|