Advertisement

தனது குழந்தையின் பெயரை அறிவித்தார் நடிகர் நகுல்!

By: Monisha Fri, 21 Aug 2020 1:22:19 PM

தனது குழந்தையின் பெயரை அறிவித்தார் நடிகர் நகுல்!

பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ’காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ ’கந்த கோட்டை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலி ஸ்ருதிபாஸ்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த குழந்தைக்கு பெயர் வைக்க நகுல்-ஸ்ருதி தம்பதியினர் ஆழ்ந்த யோசனையில் இருந்த நிலையில் தற்போது குழந்தையின் பெயரை தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக நகுல் அறிவித்துள்ளார்.

actor nakul,sruthibaskar,child,name,akira ,நடிகர் நகுல்,ஸ்ருதிபாஸ்கர்,குழந்தை,பெயர்,அகிரா

நகுல் தனது குழந்தையின் பெயர் 'அகிரா' என்றும் அவருக்கு வாழ்த்துக் கூறுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக நகுல் பதிவு செய்த இன்னொரு இன்ஸ்டாகிராம் பதிவில், தங்கள் செல்லக் குழந்தையின் செல்ல பெயர் ‘குல்பி’ என்று குறிப்பிட்டு உள்ளார். குல்பி என்பது தனது பெயரின் கடைசி இரண்டு எழுத்துக்களும், தனது மனைவியின் பெயரில் கடைசி மூன்று எழுத்துக்களும் கொண்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். செல்லப் பெயராக குல்பி இருந்தாலும் உண்மையான பெயர் 'அகிரா' என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நகுல் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|