Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா?...நடிகர் பார்த்திபன் டுவிட்

இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா?...நடிகர் பார்த்திபன் டுவிட்

By: Monisha Fri, 10 July 2020 11:52:09 AM

இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா?...நடிகர் பார்த்திபன் டுவிட்

விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் போஸ்டர் கவர்ந்தது. மேலும் இந்த போஸ்டருக்கு பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் எதையும் வித்தியாசமான முறையில் தெரிவிக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று ‘துக்ளக் தர்பார்’ போஸ்டர் வெளியானதும் தனது சமூக வலைத்தளத்தில், ‘நண்பர் விஜய் சேதுபதிக்கு DOUBLE வெற்றியாகவும், நாணயமிக்க லலித் அவர்களுக்கு மிக்க நாணயங்களும், இயக்குனருக்கு கோடிகள் கூடுதலாகவும், உடன் நடிப்போரும் பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள்! என்று தெரிவித்திருந்தார்.

tughlaq darbar,actor parthiban,vijay sethupathi,photography,tweet ,துக்ளக் தர்பார்,நடிகர் பார்த்திபன்,விஜய் சேதுபதி,புகைப்படம்,டுவிட்

துக்ளக் தர்பார்’ படத்தில் பார்த்திபனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் பார்த்திபன், தன்னுடன் விஜய்சேதுபதி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு "இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா"ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்? உன் MASTER plan தான் என்ன? என்று கூறியுள்ளார்.

Tags :