Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • எதிர்நீச்சல் சீரியலில் இனி ஆதி குணசேகரனாக நடிக்க இருப்பது நடிகர் பசுபதி?

எதிர்நீச்சல் சீரியலில் இனி ஆதி குணசேகரனாக நடிக்க இருப்பது நடிகர் பசுபதி?

By: Nagaraj Sat, 16 Sept 2023 11:08:20 AM

எதிர்நீச்சல் சீரியலில் இனி ஆதி குணசேகரனாக நடிக்க இருப்பது நடிகர் பசுபதி?

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் பசுபதி நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது.

கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே கதை நகர்ந்து வருகிறது.

பெண்அடிமை படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தனது சொந்த காலில் நிற்க போராடும் பெண்களின் கதையாக இப்போது கதை இருக்கிறது. சொத்து விவகாரத்தில் அப்பத்தா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

adhikunasekaran,actor pasupathi,marimuthu,death,director,counter-swimming ,ஆதிகுணசேகரன், நடிகர் பசுபதி, மாரிமுத்து, மரணம், இயக்குனர்,எதிர்நீச்சல்

இந்நிலையில் பெரிய அதிர்ச்சியாய் வந்தது தான் மாரிமுத்து அவர்களின் மரணம். இதனால் அவருடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் வெகு சோகத்தில் உள்ளனர்.

மாரிமுத்து மரணம் எல்லோருக்கும் கடும் துக்கத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இனி ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்பது தான் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. வேல ராமமூர்த்தி இனி குணசேகரனாக நடிப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் ஓகே சொல்லாதது போல் தெரிகிறது.

தற்போதைய தகவல்படி குணசேகரனாக நடிக்க நடிகர் பசுபதிக்கு அதிக வாய்ப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை. அதை தொடர் இயக்குனர்தான் உறுதி செய்ய வேண்டும்.

Tags :
|